செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (17:28 IST)

தேர்தல் சின்னம் பொறித்த முகமூடி அணிந்த வேட்பாளர் – பீகார் தேர்தல் சர்ச்சை!

பீகார் தேர்தலில் தனது சின்னம் பதித்த முகமூடியை அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக இன்று பீகார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

கயா தொகுதியில் வாக்களிக்க அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிரேம் குமார் தாமரை வரையப்பட்ட முகக்கவசம் அணிந்தபடி வாக்களித்தார்.  இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும். ஆனால் அவரை தேர்தல் அதிகாரிகளோ காவலர்களோ தடுத்து நிறுத்தவில்லை. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.