வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (13:05 IST)

உதயநிதிக்கு செக் வைத்த பிகே: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?

உதயநிதிக்கு செக் வைத்த பிகே: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?
திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவின் அதிகார மையமாக இருப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால் திமுக அரசியல் தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் ஆனால் அதனை நேரடியாக ஸ்டாலினிடம் சொல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுகவுக்கு தேர்தல் பணிபுரியும் பிகேவிடம் ஒரு சில திமுக பிரமுகர்கள் இதுகுறித்து புகார் கூறியதாகவும் உதயநிதியை முன்னிலைப்படுத்தினால் கட்சி பின்னடைவுக்கு செல்லும் என்று அவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது 
 
இந்த விஷயத்தை பிகே நேரடியாகவே ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து வரும் தேர்தல் வரை உதயநிதியை அடக்கி வாசிக்க சொல்ல முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் உதயநிதி சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது உதயநிதிக்கு சீட் கொடுக்க வேண்டாம் என பிகே பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உதயநிதி தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது