1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (13:32 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்; களமிறங்கிய பெங்களூர் தமிழ் சங்கம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் இன்று காலை பெங்களூரில் தமிழ் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அரசு கட்டிடமான மயோ ஹாலில் இந்த போராட்டம் நடந்தது.