வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (15:17 IST)

காவி உடையில் வந்த பெல்காவி பிஷப் : சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்

கர்நாடக மாநிலம் பெல்காவியில் பிஷப் பாதிரியார் காவி உடையணிந்து கிறிஸ்தவ மத சடங்குகள் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மறைமாவட்ட ஆயராக பதவி வகித்து வருபவர் டெரிக் பெர்னாண்டஸ். இவர் சில நாட்களுக்கு முன் பெலகாவி அருகே உள்ள தேஷ்னூர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் காவி நிற அங்கி உடுத்தி, நெற்றியில் திலகமிட்டு சென்றுள்ளார். மேலும் திருச்சபையில் இந்து மத முறைகளின் படி பிரார்த்தனை செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்து மக்களை மதம் மாற்றுவதற்காக பாதிரியார் இதுபோன்ற செயல்களை செய்வதாக இந்து மக்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதே சமயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களோ பாதிரியார் இதுபோன்று அடுத்த மத சடங்குகளை செய்து கத்தோலிக்க மதத்தின் மாண்பை கலைத்து விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த சர்ச் முதலில் ஒரு மடமாக இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பாதிரியார்கள் அந்த மடத்தின் பழக்கவழக்கங்களை பின்பற்றி புலால் உண்ணாமை ஆகியவற்றை கடைபிடித்ததாகவும், அத நினைவூட்டும் விதமாகவே இந்த சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆயர் ஃபெர்னாண்டஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.