வாட்ஸ்ஆப்-ல் டிபி வைத்தால் ஜாமீன் ரத்து- குற்றவாளிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத் நீதிமன்றம் குற்றவாளி தன் வாட்ஸ் ஆப் டிபியில் பாதிக்கபப்ட்ட பெண்ணின் புகைப்படத்தை வைத்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், அப்பெண்ணின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், அந்த நபருக்கு அலஹாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை அவரது வாட்ஸ் ஆப்பில் டிபி ஆக வைத்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நிபந்தனை விதித்துள்ளது.