செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (14:35 IST)

4 ஆண்டு சிறைதண்டனை.. ராகுல் காந்தியை மேலும் ஒரு எம்பி பதவியிழப்பு..!

சமீபத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்த நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம் பி ஒருவர் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து எம்பி பதவியை இழந்தார். 
 
கடந்த 2005 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ உள்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காசிப்பூர் தொகுதி எம்பி அப்சல் அன்சாரி குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்ப்பில் காசிப்பூர் தொகுதி எம்பி அப்சல் அன்சாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் எம்.பி பதவியை இழக்க நேரிடும் என்ற விதியின் அடிப்படையில் அப்துல் அன்சாரி பதவி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ராகுல் காந்தி, முகமது பைசல் ஆகிய இருவர் எம்பி பதவியை இழந்த நிலையில் தற்போது மூன்றாவது எம்பி ஒருவரும் தனது பதவியை இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva