வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (10:53 IST)

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்..! 7 ஆயிரம் விஐபிகளுக்கு சிறப்பு அழைப்பு!

Ram Mandir
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அப்பகுதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கபட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் முடிந்து ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நடிகர், நடிகையர், தொழிலதிபர்கள் என இந்தியா முழுவதும் உள்ள 7 ஆயிரம் விஐபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பானதாக புகழ்பெற்ற ராமாயண டிவி தொடரில் ராமர் மற்றும் சீதையாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா உள்ளிட்டோருக்கும் விஐபி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1990ல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான 50 கர சேவகர்களின் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து வருகிறது. இதுதவிர பல வெளிநாட்டு பிரமுகர்கள், உள்நாட்டு கலைஞர்கள், எழுத்தாளர்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள், தேசிய விருது, பத்ம விருது பெற்றவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K