புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:46 IST)

இறுதிக்கட்ட விசாரணையில் அயோத்தி வழக்கு: தீர்ப்பு எப்போது?

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. இன்று விசாரணை நடைபெற உள்ளதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி உள்பட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது 
 
மொத்தம் 14 அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய முயன்ற ஒரு குழுவின் முயற்சி தோல்வி தோல்வியடைந்தது 
 
இந்த நிலையில் சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று பிரிவினர்களும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர் 
 
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுகிறது 
 
இன்றுடன் விசாரணை முடிவடைந்த பின்னர் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது அனேகமாக நவம்பர் 14ம் தேதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அயோத்தி பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது