புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 25 ஜூன் 2018 (20:39 IST)

இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜெட்லி

நெருக்கடிநிலை பிரகடனம் கொண்டு வரப்பட்ட தினத்தின் 43ஆம் ஆண்டு அனுசரிகப்படும் நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.

 
1975ஆம் ஆண்டு முன்பு இன்றையை தினத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடிநிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டது. 43ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்றும் அதன் தாக்கம் குறையவில்லை.
 
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூலில் இதுதொடர்பாக கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 
 
காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார். இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்தார்.
 
எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிடப்பார்கள். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. இதேபோன்று நாஜி ஜெர்மனியிலும் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலைமப்பை ரத்து செய்தார்கள். அவர்கள் ஜனநாயகத்தை சர்வாதிகரமாக மாற்றுவதற்கு குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அருண் ஜெட்லியின் இந்த ஒப்பீடு மிகவும் மோசமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.