திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (17:38 IST)

தேனீர் செலவிற்காக ரூ 1.03 கோடி செலவு செய்த முதல்வர் அலுவலகம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேனீர் செலவிற்கு ரூ 1.03 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

 
 
கடந்த 2004-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் அறிமுகம் செய்யப்பட்டது தகவல் உரிமை சட்டம். இந்த சட்டத்தின் கீழ் மக்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து தகவலை பெறலாம்.
 

இதன் மூலம் கடந்த வாரம் சமூக ஆர்வலர் ஹேமந்த் சிங் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலக செலவு விபரத்தை கேட்டுள்ளார். அதன்படி அவருக்கு கிடைத்த விபரத்தில், முதல்வர் அலுவலகத்தில் தேனீர் செலவிற்காக 2015-2016 நிதியாண்டில் 23 லட்சத்து 12ஆயிரம் ரூபாயும், 2016-2017 நிதியாண்டில் 46லட்சத்து 54 ஆயிரம் ரூபாயும், 2017-2018 நிதியாண்டில் 33லட்சத்து 36ஆயிரம், மொத்தமாக 4 ஆண்டுகளில் ரூ 1.03 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.