திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (21:16 IST)

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு !

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு !

நேற்று  (24 ஆம் தேதி)  குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
 
அதன்பிறகு,   உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க டிரம்ப் தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் யனுமை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அப்போது, டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி விளக்கினார்.
 
இன்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இதனைத்தொடர்ந்து, மாலையில், ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் , ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் மோடியுடன் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான பங்கேற்றுள்ளார்.