பனிமழையால் ஆப்பிள் மரங்களுக்கு வந்த சோதனை..
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடினமான பனிப்பொழிவுனால் ஆப்பிள் மரங்கள் முறிந்து விழுந்தன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள புல்வாமா மற்றும் சோபியன் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவு கடினமாக இருப்பதால், அப்பகுதியிலுள்ள ஆப்பிள் மரங்கள் முறிந்து விழுந்தன.
பனி அதிக கனத்துடன் இருப்பதால், அந்த கனத்தை தாங்க முடியாமல் கிளைகள் உடைந்து விழுந்துள்ளன. இதனால் 70% ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக நவம்பர் மாதம் பனிமழை பெய்துள்ளது எனவும் வழக்கத்தை விட அதிகமாக பனிமழை பெய்துள்ளது எனவும் அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த மழையால் பெரும் நஷ்டடம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.