திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:54 IST)

இந்தியாவில் 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம்.. யாருக்காக தெரியுமா?

apple store
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 78,000 வீடுகளை தங்களது ஊழியர்களுக்காக கட்டிக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில்  தொழிற்சாலைகள் ஏற்படுத்தி ஐபோன்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78,000 வீடுகள் கட்டும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த வீடுகளின் கட்டுமான பணி முடிவடைந்து ஊழியர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ள நிலையில் ஊழியர்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 78,000 வீடுகள் கட்ட இருப்பதாகவும் அதற்காக ஏற்பாடுகளும் முழு முயற்சியில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் மகளிர் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்து பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அலுவலகம் அருகிலேயே வீடுகள் கட்டப்படும் என்றும் இதனால் ஊழியர்களின் நேரம் மற்றும் பொருளாதார மிச்சமாகும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran