1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (17:38 IST)

அம்பானிக்கு மாதம் ரூ.42 லட்சம் வாடகை செலுத்தும் ஆப்பிள் நிறுவனம்

apple store
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானிக்கு ஆப்பிள் நிறுவனம் மாதம் ரூ.42 லட்சம் வாடகை செலுத்துவதாக தகவல் வெளியாகிறது.
 

உலகில் முன்னணி  மின்னணு தொழில் நுட்ப சாதனங்கள்  தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில்  முதன் விற்பனைக் கடையை சமீபத்தில் திறந்தது.
ஏப்ரல் 18 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ  விற்பனைக் கடை, மும்பையில்  அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் வாலில் டிக் குக் திறந்துவைத்தார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2 அது சில்லரை விற்பனைக் கடை சாகேட்டில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில்  20 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ஜியோ டிரைவ் மாலில் APPle BKC என்று பெயரிடப்படுள்ள விற்பனைக் கடைக்கு, சுமார் 20,800 சதுர அடிக்கு 11 வருட அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதற்காக அம்பானிக்கு ஆப்பிள் நிறுவனம் மாதம் ரூ. 42. லட்சம் என்று கூறப்படுகிறது.