1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:19 IST)

குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி?? – கேரளாவில் மடத்தை சூறையாடிய மக்கள்!

கேரளாவில் பெண் சாமியார் ஒருவர் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்றதாக மக்கள் மடத்தை சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் தம்பதியர் மந்திரவாதியுடன் சேர்ந்து இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பத்தினம்திட்டா பகுதியில் ஒரு நரபலி முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடம் என்ற மடத்தை பெண் சாமியார் ஷோபனா என்பவர் நடத்தி வந்துள்ளார். பல ஆண்டுகளாக அங்கு மடம் நடத்தி வரும் ஷோபனா மந்திர காரியங்களுக்கு சிறுவர், சிறுமிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.


இதுகுறித்து ஏற்கனவே பொதுமக்கள் புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது நரபலி செய்திகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெண் சாமியார் ஷோபனாவை கைது செய்த போலீஸார், அவர் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்றாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மடத்தில் இருந்த சிறுவர், சிறுமியர் அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெண் சாமியார் மீது ஆத்திரத்தில் இருந்த அப்பகுதி மக்கள் மடாலயத்தை சூறையாடியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Edited By: Prasanth.K