1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (20:03 IST)

கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!

கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி சட்டமன்ற சபாநாயகர் கையை உடைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் என்பவர் இன்று ஆந்திர மாநிலத்தில் கபடி விளையாட்டை தொடங்கிவைத்தார். 
 
மாநில அளவில் நடைபெறும் இந்த கபடி ஆட்டத்தை தொடங்கி வைக்கும் போது அவர் கபடி விளையாட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை அடுத்து அவருடைய கை லேசாக முறிந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது