வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜூன் 2025 (16:39 IST)

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.
திருமணமான சில வாரங்களிலேயே புதுமாப்பிள்ளை, அவரது மனைவி மற்றும் அவரது காதலனால் கூலிப்படையினர் மூலம் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த சம்பவத்தில் மனைவி, காதலன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
 
இந்த நிலையில் தலைமறைவான மனைவி ஐஸ்வர்யா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன்  அவருடைய காதலர்  ராவ் உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்  தனது மகன் ராவை காப்பாற்ற முயன்ற அவரது  தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்த வழக்கின் விசாரணையில், திருமணமான ஒரு மாதத்திற்குள், ஐஸ்வர்யா தனது காதலன், வங்கி மேலாளர் திருமால் ராவ் உடன் சேர்ந்து, தேஜஸ்வரை கொல்ல மூன்று பேரை நியமித்தது தெரியவந்தது. கொலைக்கு ரூ.2 லட்சம் முன்பணமாகவும் ராவ் கொடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது..
 
மேலும் சிசிடிவி காட்சிகளின்படி ஐஸ்வர்யா கணவர் தேஜஸ்வர் ஒரு காரில் ஏறி கர்நூல் நோக்கி செல்வதை காட்டின. "நில அளவை சாக்கில் அழைத்துச் சென்ற கொலையாளிகள், தேஜஸ்வரின் தொண்டையை அறுத்து, வயிற்றில் குத்தியுள்ளனர்," என்று எஸ்.பி. ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார். உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.
 
தேஜஸ்வர் கொலை, கடந்த மாதம் மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலைக்கு சில வாரங்களுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva