வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (08:27 IST)

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம்?? – ஆந்திர அரசு அனுமதி!

ஆந்திராவில் கொரோனாவிற்கு சித்த மருத்துவம் மூலமாக ஒருவர் தயார் செய்துள்ள கத்தரிக்காய் லேகியத்திற்கு அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அலோபதி மருந்துகள் மட்டுமல்லாமல் சித்தா உள்ளிட்ட மருத்துவ முறைகளிலும் குணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் சித்த மருத்துவரான போனஜி ஆனந்தய்யா என்பவர் கொரோனா நோயாளிகளுக்காக கத்தரிக்காய் கொண்டு லேகியம் செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதை வாங்க பல மாநில மக்களும் ஆந்திரா வந்த நிலையில், கள்ள சந்தையில் இந்த லேகியம் அதிக விலைக்கு விற்றதாகவும் தெரிய வந்துள்ளது. உடனடியாக அந்த லேகியத்திற்கு தடை விதித்த ஆந்திர அரசு, அந்த லேகியம் கொரோனாவை குணப்படுத்துமா? ஆரோக்கியமானதா? என ஆய்வு செய்யுமாறு ஐ.சி.எம்.ஆருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு அந்த மருந்தை ஆய்வு செய்து இந்த மருந்தால் பக்க விளைவுகள் வராது என்றும், முறையாக மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பக்க விளைவுகள் கிடையாது என்பதால் அந்த லேகியத்திற்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.