நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? சீமான தகவல்
இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிமுக- பாஜக கூட்டணியின் பிரிவை விரிசல் இல்லை அது முறிவு ; கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி சொற்ப நீரையும் திறந்துவிட கூறாது என கன்ன அமைப்புகள் போராடி வருவது மனிதத் தன்மையற்ற செயல். முதல்வரை அவமதிப்பபது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா? தனித்துப் போட்டியிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனித்துப் போட்டியிடுவேன் என்று கூறினார்.