5.5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்: அரசுக்கு ஆம்வே எச்சரிக்கை
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து இருப்பதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களீன் வாழ்வாதாரம் பாதிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து ஆம்வே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 758 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியதால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துறைசார் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், நீதிமன்ற விசாரணை இருப்பதால் இதை பற்றி அதிகம் கூற முடியாது என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது