திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (18:05 IST)

மகாராஷ்டிராவில் மரத்தில் கட்டப்பட்டிருந்த அமெரிக்க பெண்.. தமிழக முகவரியில் ஆதார் அட்டை ..

Forest
மகாராஷ்டிரா மாநிலத்தின் வனப்பகுதியில் அமெரிக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் அவரது கைப்பையில் தமிழக முகவரியில் முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை இருந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் வனப்பகுதியில் மரத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதிக்கு கால்நடைகளை மேய்த்து வருபவர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் பேசும் நிலையில் இல்லை என்றும் அவரது உடல் பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது கைப்பையில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தபோது தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் கார்டு, அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளிட்ட ஒரு சில  பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.

மேலும் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருப்பதாகவும் அவர் பல வருடங்களாக இந்தியாவில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சையில் ஓரளவு அவர் தேறியவுடன் தான் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

பல நாட்கள் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Edited by Mahendran