எரிபொருள் விலை உயர்வுக்கு அமெரிக்கா தான் காரணம்: மத்திய அமைச்சர்
எரிபொருள் விலை உயர்வுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் மத்திய அரசை குறை சொல்ல வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய ரயில்வே மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ராவ் சாகேப் என்பவர் சமீபத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசியபோது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் எரிபொருளின் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது என்றும் எனவே மத்திய அரசை குறை சொல்வது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்
இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது என்றும் ஆனால் ஒரு சில மாநிலங்கள் இன்னும் வரியை குறைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்