புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (10:56 IST)

குஜராத் கல்லூரி வாசலில் இருந்த அம்பேத்கர் சிலை சேதம்.. மக்கள் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கல்லூரியின் வாசலில் இருந்த அம்பேத்கர் சிலை சேதம் அடைந்ததை அடுத்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் கோக்ரா என்ற பகுதியில் எஸ்.பி.கே.கே. சாஸ்திரி கல்லூரி அமைந்துள்ள நிலையில், அந்த கல்லூரியின் முன் இருந்த அம்பேத்கரின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர்வாசிகள் திடீரென போராட்டம் செய்து வருகின்றனர். அடையாளம் தெரியாத சிலர் அம்பேத்கரின் சிலையின் மூக்கு மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டம் செய்த பொது மக்களை சமாதானப்படுத்திய போலீசார், குற்றவாளிகள் மீது விரைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியதால் சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது.


Edited by Mahendran