ரூ.70 ஆயிரத்திற்கு போலி எம்பிபிஎஸ் சான்றிதழ்: 14 போலி டாக்டர்கள் கைது..!
குஜராத் மாநிலத்தில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் காசு கொடுத்து எம்.பி.பி.எஸ். சான்றிதழ் வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் போலி டாக்டர்கள் வலம் வந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு புகார் வந்த நிலையில், திடீரென சில மருத்துவமனைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலி மருத்துவர் சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்து வந்த சில டாக்டர்களிடம் விசாரணை செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 70 ஆயிரம் கொடுத்து டாக்டர் பட்டத்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, குஜராத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் முக்கிய தொடர்புடையவராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சோதனை நடந்து வருவதாகவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு 15 நாட்களில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு தொடர்புடைய அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதிபட தெரிவித்துள்ளது.
Edited by Mahendran