ராமர் கோவில் கட்ட 500 கோடி அளித்தாரா அம்பானி??
ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.500 கோடி நிதியுதவி வழங்கினார் என பரவிய புகைப்படத்தை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மை வெளிவந்துள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் சந்தித்து கொண்ட புகைப்படத்தை பலரும், ராமர் கோவில் கட்டுவதற்கு முகேஷ் அம்பானி நிதியுதவி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்த உண்மை பின்னணி வெளிவந்துள்ளது. அதாவது அந்த புகைப்படம் 2017 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத்தும் முகேஷ் அம்பானியும் சந்தித்து கொண்ட போது எடுத்த புகைப்படம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் பரவிய செய்தி போலியான செய்தி என தெரியவந்துள்ளது.