திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?
பெங்களூரில் அமேசான் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வரும் நிலையில், வாடகைச் செலவை மிச்சப்படுத்த வேறு இடத்திற்கு மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே உள்ளிட்ட சில நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் பெங்களூரில் தான் தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த கட்டிடத்தின் வாடகை அதிகமாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்ற திட்டம் இடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில், ஒரு சதுர அடி 250 ரூபாய் என வாடகைக்கு சுமார் 5 லட்சம் சதுர அடியை அமேசான் தலைமையகம் உள்ளது. இந்த நிலையில், தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட தூரத்தில் உள்ள சத்வா டெர்மார்க் என்ற இடத்திற்கு மாற்றப்பட இருப்பதாகவும், 11 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏழாயிரம் பேர் பணியாற்றுவதற்கான புதிய தலைமையகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முந்தைய தலைமை கட்டிடத்தின் வாடகை விட மூன்றில் ஒரு பங்கு தான் இங்கு வாடகை செலவாகும் என்றும், எனவே பெரும் அளவு மிச்சமாகும் என்பதால், இன்னும் ஒரு சில மாதங்களில் தலைமையகம் இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva