1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (20:12 IST)

அமர்நாத் யாத்திரை ரத்து: நேரலை காணொலியில் ஆராதனைகள்

ஒவ்வொரு ஆண்டும் இமயமலையில் அமர்நாத் யாத்திரை செல்வது பக்தர்களுக்கு வழக்கம் என்பதும் அங்கு தோன்றும் பனிலிங்கத்தை காண்பதற்காக பக்தர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இந்த பனி லிங்கத்தை காண்பதற்காக அமர்நாத் யாத்திரை செல்வது உண்டு என்பதும், இந்த யாத்திரைக்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் காலை மாலை ஆகிய இரண்டு வேலைகள் நடைபெறும் ஆராதனைகள் காணொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது 
 
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படடது பக்தர்களுக்கு பெயர் அதிர்ச்சியாக இருந்தாலும் காணொளி மூலம் ஆராதனை நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு இருப்பதால் பக்தர்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது