1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (14:11 IST)

பாஜகவை தோற்கடிக்க இதையும் செய்வேன்: அகிலேஷ் யாதவ் பேட்டி

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடையே இணக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 
நேற்று மெயின்புரி எனுமிடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் அகிலேஷ் யாதவ். அப்போது அவர், பகுஜன் சமாஜ் கட்சியோடு நாங்கள் வைத்துள்ள கூட்டணி, இனிமேலும் தொடரும். பாஜகவை தோற்கடிப்பதற்காக, நாங்கள் 2-4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனைச் செய்யவும் தயாராக உள்ளோம்.
 
இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியானது, பொதுத்தேர்தலிலும் தொடரும். பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமென்பதே எங்களது நோக்கம். பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணியை தொடரத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.