1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (12:23 IST)

கர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 

 
 
கர்நாடகத்தில் கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
 
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11-ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அதன்படி இந்த தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும், பாஜக சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 
 
216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை  நடைபெற உள்ளது.