தீபாவளியால் மோசமான அளவை எட்டிய காற்று மாசு..
டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது தவிர்த்து மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என பல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தன. ஆனாலும் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரத்தின் ஒன்றாக பார்க்கப்படுவதால், தீபாவளி ஆரம்பிப்பதற்கு முன்பே பட்டாசுகளை கொளுத்த ஆரம்பித்தனர்.
டெல்லியில் முன்னதாகவே வாகன புகை காரணமாக காற்று மாசு அளவு அதிகரித்து கொண்டே வந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், டெல்லி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்று மாசின் அளவு மிகவும் மோசமான அளவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அப்பகுதிகளில் காற்று தர குறியீடு டெல்லியில் 306 ஆகவும் மற்றும் 356 ஆகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் பட்டாசு காரணமாக காற்று தர குறியீடு 279 ஆக எட்டியுள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சனிக்கிழமை, காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சிகள், காற்று மாசு வருகிற நாட்களில் அதிகரிக்கும் என கூறிவந்த நிலையில், தற்போது தீபாவளியில் காற்று மாசு மோசமான அளவை எட்டியுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டதாகவும் வெளியான தகவால் குறிப்பிடத்தக்கது.