ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா! – தனிமைப்படுத்தல் தீவிரம்!
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்களை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட பல நாட்டினரை இந்தியா மீட்டு வருகிறது. அந்த வகையில் 26 இந்தியர்கள் உட்பட 78 பேரை சமீபத்தில் இந்தியா மீட்டது. முதலில் தஜிகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 78 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து 228 இந்தியர்கள் உட்பட 626 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.