ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தர முடியாது! – உலக வங்கி திடீர் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் நிதி வழங்குவதை நிறுத்துவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தலீபான்கள் அமைப்பு நாட்டை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் குறித்து தலீபான்கள் எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை. அதேசமயம் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியதை உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் தலீபான்களால் ஆப்கன் பெண்கள் நிலை மேலும் மோசமாகும் என உலக வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.