செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (11:32 IST)

நீங்க நிஜ ஹீரோ இல்லை: பாசங்கு வேண்டாம்... மோடி மீது சித்தார்த் கடும் தாக்கு

நடிகர் சித்தார்த் பிரதமர் நரேந்திரமோடியை புல்வாமா தாக்குதல் விவகாத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் நாட்டு நடப்பு தொடர்பு விஷயங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் சித்தார்த். இந்நிலையில் பிரதமர் புல்வாமா 
 
தாக்குதல் மற்றும் அபிநந்தன் விவகாரம் தொடர்பாக  கருத்து தெரிவித்த மோடி,  "நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப்படுவதும் 
 
இயற்கையான ஒன்று. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் ராணுவப் படையினரை சிலர் கேள்வி கேட்கின்றனர்" என வேதனை தெரிவித்து இருந்தார். இந்த பேச்சு 
 
பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில, இதற்கு பதில் அளிக்கும் வகையில் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
 
அதில், ''நம் தேசத்தின் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.
 
உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம். நீங்கள்தான் படையினரை மதிக்க வேண்டும். நீங்கள் ராணுவ வீரர் 


 
இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்'' என கூறியுள்ளார்.