வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (07:25 IST)

தனது மாநில மக்களை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும் பிரபல அரசியல்வாதியுமான பவன்கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது மாநில மக்களை காப்பாற்றும்படி எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள மீனவர்கள் சுமார் 90 பேர் தமிழக கடற்கரையில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் கடந்த சில நாட்களாக உணவு மற்றும் உறைவிடம் இன்றி தவிப்பதாகவும் அவர்களின் உணவு மற்றும் தங்குமிடத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதோடு அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும் தமிழக முதல்வருக்கு நடிகர் பவன்கல்யாண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
உயர்த்திரு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு, என்‌ சரம்‌ தாழ்ந்த வணக்கங்கள்‌.
 
ஸ்ரீகாகுளம்‌ மாவட்டம்‌ சோமபேட்டா மண்டலத்தின்‌ கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார்‌ தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள்‌, கோரோனா வைரஸ்‌ பாதிப்பால்‌ நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில்‌ தவித்து வருகின்றனர்‌. அவர்களுக்கு போதிய தங்கும்‌ வசதி மற்றும்‌ உணவு இன்றி மிகவும்‌ கவலைக்‌கிடமாக உள்ளனர்‌. அவர்களது குடும்பத்தார்‌ இது குறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள்‌. ஜனசேனை தொண்டர்கள்‌ மூலம்‌ இந்த விடயத்தை அறிந்த நான்‌ மிகவும்‌ வேதனையடைந்தேன்‌. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர்‌ எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்‌ இந்த விடயம்‌ தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய உணவு மற்றும்‌ உறைவிடம்‌ வழங்கி அவர்களின்‌ ஊருக்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
 
மேலும்‌ ஸ்ரீகாகுளம்‌ ஜில்லா கலெக்டர்‌ அவர்கள்‌ இது குறித்து மேற்கண்ட தகவலையும்‌ அந்த தொண்ணூற்றி ஒன்பது மீனவர்கள்‌ பற்றின தகவல்களை அந்த கவலையுற்ற மீனவக்‌ குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
 
இவ்வாறு பவண்கல்யான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.