வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (17:23 IST)

இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி உரை!!

இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். 
 
அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது. 
 
மேலும், பல வீடுகள் தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தைய சூழ்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் இன்று பேசுவார் என தெரிகிறது.