நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு - விமானம் தரையிறக்கம்
விமானத்தில் சென்று கொண்டிருந்த போது நடிகர் கேப்டன் ராஜுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜூ. தமிழில் ஜல்லிக்கட்டு, ஜீவா, தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நேற்று விமானத்தில் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் நெஞ்சுவலியால் துடித்தார்.
எனவே, விமானம் அவசரமாக ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் ராணுவத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.