தடுப்பூசிக்கான தவணைக்காலம் குறைகிறது
கொரோனா தடுப்பூசியின் தவணைக்காலத்தைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது.
கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு 2 வது தடுப்பூசி டோசுக்கான கால அளவைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
தற்போது கோவிஷீல்ட் முதல் தவணைக்குப் பிறகு 80 நாட்கள் கழித்துத்தான் 2 வது தவணை செலுத்தலால் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.