மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக: ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும் ஒருசில சிறிய கட்சிகளின் உதவியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 7 இடங்களையும் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 இடங்களை பாஜக கூட்டணியும், 3 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில், 12 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், ஒரு இடத்தை பாஜக கூட்டணியும் பிடிக்க
வாய்ப்பு உள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது
அதேபோல் ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 20 இடங்களை பாஜக கூட்டணியும், 5 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 6 இடங்களை பாஜக கூட்டணியும், 5 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 3 இடங்களை பாஜக கூட்டணியும், 10 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், ஒரு இடத்தை ஜேவிஎம் கட்சியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 35 இடங்களை பாஜக கூட்டணியும், 13 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில், 12 இடங்களை பாஜக கூட்டணியும், 9 இடங்களை பிஜூ ஜனதா தள கட்சியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 8 இடங்களை பாஜக கூட்டணியும், 34 இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 36 இடங்களை பாஜக கூட்டணியும், 4 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி 47 இடங்களையும், பாஜக கூட்டணி 29 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பாஜக வரும் தேர்தலில் 264 இடங்களை பிடிக்கும் என்றும், ஆட்சி அமைக்க இன்னும் ஒருசில இடங்களே தேவை என்பதால் சிறிய கட்சிகளின் ஆதரவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது