திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:54 IST)

இன்னும் 2 மாதங்களில் குஜராத்தில் இருந்து பாஜக வெளியேறிவிடும்: அரவிந்த் கெஜ்ரிவால்

kejrwal
இன்னும் இரண்டு மாதங்களில் குஜராத்திலிருந்து பாஜக வெளியேறி விடும் என்றும் அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சி தான் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் டெல்லி முதலமைச்சரும்,  ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும் பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று பாஜகவினர் தவறான செயல்களை செய்ய சொன்னால் மறுத்து விடுங்கள் என்றும் பாஜக வெளியேறி விட்ட பின்னர் ஆம் ஆத்மி ஆட்சிதான் அமையும் என்றும் கூறியுள்ளார். அவரது அறிவிப்பு குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.