வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (11:37 IST)

குடிக்க காசு தர மாட்டியா? அப்ப சாவு: பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்

பெங்களூருவில் குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவன் உத்தம். 25 வயதாகும் இவன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். குடிபோதைக்கு அடிமையான இவன் தனது தாயிடம் அவ்வபோது குடிக்க பணம் கேட்டு டார்ச்சை செய்துள்ளான்.
 
இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த உத்தம், தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். அவனது தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உத்தம், பெற்ற தாய் என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளான்.
 
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உத்தம் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
புகாரின் பேரில் விசாரித்து வந்த போலீஸார், தலைமறைவாக இருந்த உத்தமை கைது செய்தனர். பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை இப்படி செய்த இந்த கேடுகெட்டவனை என்ன செய்வது?