குடிபோதையில் காதலன் மீது உட்கார்ந்த 136 கிலோ காதலி: காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

lover
Last Modified புதன், 5 டிசம்பர் 2018 (10:38 IST)
அமெரிக்காவில் 130 கிலோ எடை கொண்ட காதலி மதுபோதையில் காதலன் மீது ஏறி உட்கார்ந்ததால் அவர் மூச்சுத் திணறி உயிரிந்ழந்தார்.
 
அமெரிக்காவை சேர்ந்த கீயோ பட்லர் என்பவர் விண்டி தாமஸ் என்ற 130 எடை கொண்ட பெண்மணியை காதலித்து வந்தார்.
 
இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தும்போது இருவருக்கும் இடையே செல்லமாக சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பட்லரை கீழே தள்ளிய தாமஸ் அவர் மீது ஏறி உட்கார்ந்தார்.
 
கீழே தனது காதலன் மூச்சு விட சிரமப்படுவதை அறியாத தாமஸ், தொடர்ந்து அவர் மீது அமர்ந்துள்ளார். இதில் பட்லர் பரிதாபமாக மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தீர்ப்பு வரும் 21 ந் தேதி வெளியாக இருக்கிறது. விளையாட்டாய் செய்த காரியம் விபரீதத்தில் முடிந்து ஒரு உயிரே பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :