1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (12:20 IST)

ரூ.21 ஆயிரம் வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்.. நோட்டீஸ் அனுப்பிய தாசில்தார்!

aiswaryarai
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ.21 ஆயிரம்ம் ரூபாய் வரி கட்டவில்லை என்பதற்காக தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்திற்கு அவர் ரூ.21 ஆயிரம் வரி கட்டவில்லை என்றும் அந்த பகுதி தாசில்தார் ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
 இந்த நோட்டீஸ் கண்ட பத்து நாட்களுக்குள் அவர் வரி செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வரியை செலுத்தி விடுவதாக ஐஸ்வர்யாராய் தனக்கு பதில் அனுப்பி உள்ளதாகவும் தாசில்தார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
 ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி 1200 ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran