திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (10:38 IST)

தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் தெரிவித்த குரங்கு: நெகிழ்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் தந்தையை இழந்த மகனுக்கு குரங்கு ஒன்று ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் நரகுந்தா தாலுகாவை சேர்ந்த பாட்டீல் என்பவ்ர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அக்கம் பக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
 
பாட்டீலின் மகன் தந்தை இறந்த துக்கத்தில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று பாட்டீலின் மகன் தலையில் மேல் அமர்ந்து அவரது தலையை வருடியபடி அவருக்கு ஆறுதல் கூறியது. இது அங்க்ருந்தவர்களை நெகிழச் செய்தது. மனிதனுக்கு இல்லாத பாசம், மனிதனுக்கு இல்லாத நன்றியுணர்வு மிருகங்களுக்கு இருக்கிறது என இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது.