ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (13:51 IST)

மூட்டை மூட்டையாக கொள்ளை அடித்த கும்பல் : திடுக்கிடும் சம்பவம்...

விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள அருப்புக் கோட்டை பகுதியில்  மூக்கன்  என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது கடைக்கு சபரிமகேஷ், லதா , அரவிந் ஆகிய மூவரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மூவரும் சேர்ந்து மூக்கனிடம் 837 மூட்டை சர்க்கரையை 26 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
 
ஆனால் அதற்கான பணத்தை தருகிறேன் என்று கூறி  மூக்கனை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரி திண்டுக்கல் போலிஸாரிடம் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனியை சேர்ந்த தங்கமணி என்பவரிடம் இதே கும்பல்16 லட்சத்திற்கு சரக்குகள் வாங்கிவிட்டு ஏமாற்றியதாகவும், அதேபோல மற்றொரு வியாபாரியிடம் 26 லட்சம் ரூபாய் அளவுக்கு ஏமாற்றி உள்ளதாகவும் ஒப்புக்கொண்டனர். 
 
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரையை சேர்ந்த ரேவதி, கௌதம், சௌந்தரராஜன், வசந்தி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
 
லட்சக் கணக்கில் பொருட்கள் வாங்கிவிட்டு ஏமாற்றிய கும்பலால் அருப்புக்கோட்டை பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.