1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:53 IST)

ஃபேஸ்புக்கால் 8 வருடங்களுக்கு பின் தாயிடம் சேர்ந்த மகன்

தெலிங்கானாவில் பேஸ்புக் உதவியால் வாலிபர் ஒருவர் 8 வருடங்களுக்கு பின்னர் தனது தாயிடம் சேர்ந்துள்ளார்.
தெலிங்கானாவில் கடந்த 2011ஆம் ஆண்டு தனது 8 வயது மகன் காணாமல் போனதாக சுசானா குஷாய்குடா என்ற பெண்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் எவ்வளவு முயற்சி செய்தும் காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
காலங்கள் ஓடின, ஆனால் சுசானாவால் தனது பையனை மறக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் தனது மகன் தன்னிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக்கில் தனது மகன் தினேஷ் பெயரை சர்ச் செய்து பார்த்துள்ளார்.
 
அதில் தன் மகன் இருப்பதைக் கண்ட சுசானா இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அந்த பேஸ்புக்கின்  ஐபி எண்ணை கொண்டு தேடியதில் தினேஷ் பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்தது. 
உடனடியாக பஞ்சாப் சென்ற அவர்கள் தினேஷை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர். பேஸ்புக்கால் பல்வேறு சமூக சீர்கேடுகள் நடைபெறுகிறது என சொன்னாலும் இதுபோல் சில நல்ல விஷயங்களும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.