செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:21 IST)

உல்லாசமாக இருந்த மனைவி - தலையை வெட்டி தூக்கிச்சென்ற கணவன்

கர்நாடக மாநிலத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியின் தலையை வெட்டி, அதனை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கள்ளக்காதல் விபரீதத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் கொல்லப்பட்டும் வருகிறார்கள். அப்படி கள்ளக்காதல் மோகத்தால் கர்நாடக மாநிலத்தில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்(35). இவருக்கு ரூபா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ரூபாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது கள்ளக்காதலாக மாறியது. சதீஷ் வேலை நிமித்தமாக அடிக்கடி பெங்களூர் சென்று வருவார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட ரூபா, அவ்வப்போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது சதீஷிற்கு தெரிய வரவே, அவர் ரூபாவை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத ரூபா தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரூபாய் வேறு ஒரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
பின் கோபத்தின் உச்சிக்கே சென்ற சதீஷ், அந்த வாலிபரை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். எவ்வளவு சொன்னாலும் நீ கேட்க மாட்டியா என கூறியவாறே சதீஷ் ரூபாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.
பின் மனைவியின் தலையை ஒரு பையில் எடுத்து போட்டுக்கொண்டு, 20 கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள காவலர்களிடம் தன் மனைவியின் முண்டத்தை காண்பித்தார்.
 
இதனால் காவலர்கள் அதிர்ந்துபோகினர். அங்கிருந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர். பின் சதீஷ் நடந்தவற்றைக் கூறி சரண்டைந்தார். இதனையடுத்து போலீஸார் அவர்மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.