திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (07:30 IST)

டிக்டாக் போதை: ஆபாச வலைதளங்களால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாகி பெண் ஒருவர் செய்த செயல் கடைசியில் அவருக்கே ஆப்பாக மாறிவிட்டது.

 
 
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
 
இளம்பெண்கள் யாரும் சமூகவலைதளங்களில் தங்களின் போட்டோவையோ வீடியோவையோ போட வேண்டாம், அப்படி செய்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என குடும்பத்தாரும் போலீஸாரும் பல அறிவுரைகளை கூறினாலும் சிலர் கேட்காமல் இருக்கின்றனர்.
 
அப்படி செய்ததன் விளைவே இந்த அசம்பாவிதம் நடக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி பெண் டிக்டாக்கில் செம ஃபேமசாம். இவர் எந்த வீடியோவை போட்டாலும் பயங்கர டிரெண்ட் ஆகிவிடுமாம்.
 
இதனால் டிக்டாக்கிற்கு அடிமையான அந்த பெண் எந்நேரமும் டிக்டாக் செயலியில் மூழ்கியிருக்கிறார். இதன் விளைவு அப்போது அவருக்கு தெரியவில்லை.
 
ஆனால் சில விஷமிகள் அவரின் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து அதனை ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இது பயங்கர வேகமாக பரவியது. இதனை அறிந்த அந்த பெண் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இது சம்மந்தமாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். பெண்கள் தயவுசெய்து இந்த மாதிரியான செய்லகளில் ஈடுபட்டு வாண்டடாக அவர்களை பிரச்சனையில் தள்ளிக்கொள்ள வேண்டாம் என போலீஸார் கேட்டுக்கொண்டனர்.