1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (15:29 IST)

தங்கச்சியை விரட்டி விரட்டி வெட்டிக்கொன்ற அண்ணன்: அதிரவைக்கும் காரணம்

சொத்து தகராறு காரணமாக கூட்ட பிறந்த தங்கையை அண்ணன் கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காசுக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடுமையால் பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.  சொத்துக்காக கூட பிறந்த தங்கையையும் அவரது கணவரையும் ரௌடிகளை ஏவி அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகட்கோவில் கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடன் பிறந்தவர்கள் 7 பேர். 4 ஆண்கள், 3 பெண்கள். இதில் 2 பெண்கள் இறந்துவிட்டனர். கல்யாணி என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கல்யாணிக்கும் இவரது சகோதரர் சுடலைப் பாண்டிக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் நேற்றிரவு திபுதிபுவென கல்யாணியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்யாணியை சரமாரியாக வெட்டி கொன்றனர். மேலும் கல்யாணியின் கணவரையும் அவரது மகளையும் தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர்.
 
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணியின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்யாணியின் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, சுடலையாண்டி கூலிப்படையை ஏவி தங்கையையும் அவரது கணவரையும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேவலம் சொத்துக்காக அண்ணன் தங்கையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.