திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (11:56 IST)

பிரபல ரேடியோ ஜாக்கி அடித்துக் கொலை

கேரளாவை சேர்ந்த பிரபல ரேடியோ ஜாக்கியான ரசிகன் ராஜேஷ் என்பவர் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரசிகன் ராஜேஷ்(36).  ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியும், பல குரல்களில் பேசியும் ரசிகர்களை மகிழ்விப்பதில் வல்லவர். கேரளாவில் இவரை தெரியாத மக்களே இல்லை. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
 
இந்நிலையில் ராஜேஷ் மாதவூரில் ரெக்கார்டிங்கை முடித்துக்கொண்டு  நண்பர் குட்டனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், ராஜேஷ் மற்றும் குட்டனை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார். குட்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளையும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.