மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த கார்: பதறவைக்கும் வீடியோ!
ஹைதராபாத்தில் மேம்பாலத்திலிருந்து கார் தவறி விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பயோடைவர்சிட்டி ஜங்ஷன் அருகே உள்ள மேம்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தை உடைத்து கொண்டு மேலிருந்து பாய்ந்து வந்து கீழே சாலையில் உள்ள மரத்தின் மீது மோதி விழுந்தது.
இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவர் கார் விழுந்து உயிரிழந்தார். காரை ஓட்டியவர் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.